எம்மில் பலருக்கும் எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவோ அல்லது அதிர்ச்சியின் காரணமாகவோ அதிலிருந்து விலகி இயல்பு நிலைக்கு திரும்ப இயலாத அளவிற்கு உளவியல் ரீதியாக அச்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலருக்கு செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனை, கரப்பான் பூச்சி, சிலந்தி போன்றவற்றை காணும் போதோ அல்லது அவை அவர்களுக்கு அருகில் வரும்போதோ விவரிக்க இயலாத பதற்றமும், பயமும் ஏற்படும். இதற்கு தற்போது நவீன பாணியிலான சிஸ்டமெடிக் டீசென்சிடைசேசன் தெரபி எனும் சிகிச்சை அறிமுகமாகி நல்ல பலனை அளித்து வருகிறது என உளவியல் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கவலை, அச்சம், பயம், மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் செல்லப்பிராணிகள், அச்சுறுத்தும் பிராணிகள் போன்றவற்றை காண்பதால் ஏற்படும் பயம்.. ஆகியவற்றை குறைப்பதற்கும், அதனை அச்சமின்றி எதிர்கொள்வதற்கும் systametic desensitization therapy எனும் சிகிச்சை பலனளித்து வருகிறது.
இத்தகைய சிகிச்சையின் போது உங்கள் தசைகளை தளர்வாக்குவதற்கான இயன்முறை பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி, உங்களுடைய அச்சத்திற்கு காரணமான காரணிகளை கண்டறிந்து, எந்த தருணத்தில் எவற்றை கவனிக்கும் போது எம்மாதிரியான அல்லது எந்த அளவிற்கான பதற்றமும் பயமும் மனதில் தோன்றுகிறது என்பதனை வரிசைப் படுத்தும் பட்டியல், அதனைத் தொடர்ந்து பட்டியலில் முதன்மையாக இருக்கும் விடயங்களுக்கான நடத்தை மற்றும் உளவியல் பயிற்சி.. ஆகியவற்றை நிவாரண சிகிச்சையாக வழங்கி உங்களுடைய அச்சம் தொடர்பான இடையூறுகளை களைகிறார்கள்.
பொதுவாக அச்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு நான்கு முதல் பன்னிரண்டு அமர்வுகளில் ஒரு மணி தியாலம் வீதம் இத்தகைய தெரபி வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களில் எதன் காரணமாக உங்களுக்குள் அச்சமும் பயமும் ஏற்பட்டதோ... அதனை இத்தகைய சிகிச்சையை பெற்றதற்குப் பின்பு எந்தவித பதட்டமும் இன்றி இயல்பாக எதிர்கொள்வீர்கள். அதன் பிறகு அச்சம் தொடர்பான கோளாறுகள் முழுமையாக அகன்று, அச்சமின்றி செயல்படலாம்.
வைத்தியர் ராஜமீனாட்சி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM