“போர்கிளோவர்” (Fourclover) என்ற சொல்லப்படுகின்ற ஒருவிதச் செடியின் நான்கு இதழ்களைக் கொண்ட இலையானது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக வெளிநாட்டினர் வெகு காலமாகக் கொண்டாடி வருகின்றனர். பல வெளிநாடுகளில் இந்த இலையின் சிறப்பை உணர்ந்து “அதிர்ஷ்ட தேவதை” என்றும் சிறப்பைத் தந்து போற்றுகின்றார்கள்.
நான் இது பற்றியதான நீண்டஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கப் பெற்ற நிறைவான முடிவுகளின் அடிப்படையில் இந்த “போர்கிளேவர்” இலைகளின் பரவலான பலன்களை உங்களின் நன்மைக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அதற்கு முன்பாக, இந்த இலைக்கு முக்கியத்துவமும் பெருமையும் எவ்வாறு கிடைத்தது? என்பதைச் சற்றே பார்ப்போம்.
புனித பைபிளின்படி, இறைவன் ஆதாம் ஏவாளை உலகின் முதல் மனிதர்களைாகப் படைக்கின்றார். ஒரு குறிப்பிட்ட அப்பிள் பழத்தை உண்ண வேண்டாம் என அவர்களை எச்சரித்துச் செல்கிறார். ஆனால் இறைவனின் எச்சரிக்கையை மீறி அந்த அப்பிள் பழத்தை ஏவாளின் விருப்பத்திற்கிணங்க ஆதாம் உண்டு விடுகின்றான். இதனால் வெகுண்ட இறைவன் ஆதாமை அவ்விடத்தை விட்டு அகன்று போகச் சொல்கின்றார். அப்போது ஆதாம் அதிர்ஷ்டமும் தம்முடன் தவறாது வரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் கையில் “போர்கிளோவர்” இலை ஒன்றை மட்டும் நம்பிக்கையுடன் எடுத்துச் செல்கின்றார். இந்த நிகழ்வானது நான்கு இதழ்களைக் கொண்ட போர்கிளோவர் இலையின் அதிர்ஷ்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.
போர்கிளோவர் செடியின் இலைகளில் மூன்று அல்லது நான்கு இதழ்கள் இடம் பெற்றிருக்கும். மூன்று இதழ்களைக் கொண்ட இலை ஒருவர் வீட்டில் இருக்குமானால் அதனைப் பெரும்பாக்கியமாகக் கருதப்படவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று இதழ் - இலைகள் கிடைப்பது சற்று அரிதாகும். சாதாரணமாக நான்கு இதழ் கொண்ட இலைகளே கிடைக்கின்றன. இந்த நான்கு இலைகளைப் பாடம் பண்ணி புத்தகத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு பேப்பரில் வைத்து லேமிலினட் செய்து வைக்கலாம். இதை எந்த முறையில் உடன் வைத்துக் கொண்டாலும் அதிர்ஷ்டம் நாடிவரும் என்பது உறுதி.
இந்த நான்கு இதழ்கள் கொண்ட போர்கிளோவர் இலையின் தத்துவம் என்னவென்றால், நம்பிக்கை, அதிர்ஷ்டம், அன்பு, தைரியம் ஆகிய நான்கினையும் இந்த நான்கு இதழ்களும் பிரதிபலிக்கின்றன. இந்த நான்கும் ஒரு மனிதனுக்கக் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமும் கிடைத்து விட்டது போல் தானே!
- வைத்தியர் - மீனாட்சி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM