(நெவில் அன்தனி)
அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்டில் நடைபெற்றுவரும் முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதை நெருங்கும் பருவமங்கை விஷ்மி குணரட்ன, கன்னிச் சதம் குவித்து வரலாறு படைத்தார்.
இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார்.
எதிர்வரும் வியாழக்கிழமை 22ஆம் திகதி தனது 19ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள விஷ்மி குணரட்ன, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் நேரஞ்செல்ல செல்ல திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதத்தைப் பெற்றார்.
வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தபோதிலும் மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆனால், சதத்தைப் பூர்த்தி செய்த சூட்டோடு விஷ்மி குணரட்ன ஆட்டம் இழந்தார்.
ஹாசினி பெரேராவுடன் 3ஆவது விக்கெட்டில் விஷ்மி குணரட்ன 122 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் கவித்துள்ளார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, சற்று நேரத்துக்கு முன்னர் 44 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM