பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சுகாதாரத் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பயணம் மேற்கொண்டு விட்டு பாகிஸ்தானுக்கு திரும்பியவர்களில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் எந்த மாறுபாடு கொண்ட வைரஸ் கண்டறியப்பட்டது என்பது தெரியவில்லை.
அவர்களில் இருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நோயாளியின் மாதிரிகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திற்கு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், மூன்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என கைபர் பக்துன்க்வாவிற்கான சுகாதார சேவைகளின் பணிப்பாளர் சலீம் கான் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு நோயாளி மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM