(எம்.ஆர்.எம்.வசீம்)
சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும். மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம், நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக வரிசையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று,எரிவாயு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார். ரணில் விக்ரமசிங்கவின் இந்த மகத்தான பணிக்கு இறைவனின் ஆசிர்வாதமாகவே அவருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருக்கிறது. சமையல் எரிவாயு வரிசையின் நினைவுகளுடன் சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச்செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க முக்கியமாகும். ரணில் இல்லை என்றால் சமையல் எரிவாயு இல்லை. அந்தளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
எனவே ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் எவ்வாறு சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட ஏனைய வரிசை யுகத்துக்கு தீர்வு கண்டாராே அதேபோன்று மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார சுமைக்கும் தீர்வுகாண்பார். அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒருசில வேலைத்திட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பயனாகவே அஸ்வெசும போன்ற நிவாரண திட்டங்களை வழங்கி வருகிறோம். அதனால் மக்களுக்கு சமையல் எரிவாயு இல்லாமல் முடியாது. அதேபோன்று ரணில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை மக்கள் தேர்தலில் காட்டுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM