நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுக்கலை கொண்டக்கலை பகுதியைச் சேர்ந்த இருவர் ஏராளமான இடங்களில் பணம் , நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களையும் கொள்ளையிட்ட திருடர்களை புதன்கிழமை (14) கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரில் ஒருவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் மற்றொருவர் 29 வயதுடையவர் எனவும் குறித்த திருடன் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் இறுதியில் வலப்பனை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பல முறை விளக்க மறியலில் வைக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இறுதியில் ஆகஸ்ட் (13) திகதி இரவு நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியில் உள்ள வீடொன்றில் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த இவ்விரு திருடர்களும் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனினும் நுவரெலியா தலைமையக பொலிஸார் இரு திருடர்கள் வீட்டிலிருந்து திருடப்பட் அதிகமான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பல பொருடகளை கைப்பற்றியுள்ளதாகவும் இவற்றின் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் அடங்குவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் வியாழக்கிழமை (15) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். இதன்போது மேற்படி இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM