bestweb

பாராளுமன்றம் 21 ஆம் திகதி மாத்திரம் கூடும்; பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

Published By: Vishnu

15 Aug, 2024 | 07:17 PM
image

ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அதற்கமைய, ஆகஸ்ட் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல்  10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து ம10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்) தனியார் உறுப்பினர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக பிரேரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து  5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க...

2025-07-20 23:33:41
news-image

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த...

2025-07-20 22:25:42
news-image

ஜூலை 22 முதல் 25 வரை...

2025-07-20 21:15:56
news-image

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே...

2025-07-20 21:21:57
news-image

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம்...

2025-07-20 19:42:50
news-image

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 -...

2025-07-20 19:04:20
news-image

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட...

2025-07-20 18:43:57
news-image

மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து...

2025-07-20 18:12:42
news-image

சம்பூர் கடற்கரையில் மிதிவெடி அகழ்வுப் பணியின்...

2025-07-20 22:58:54
news-image

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன்...

2025-07-20 23:03:26
news-image

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில்...

2025-07-20 17:25:24
news-image

கொட்டாவை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர்...

2025-07-20 16:53:08