அறிமுக நடிகர் ஏகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய விருது பெற்ற படைப்பாளியான சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' எனும் திரைப்படத்தில் ஏகன், பிரிகிடா, யோகி பாபு, 'குட்டி புலி' தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து மக்களின் எளிய வாழ்வியலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்தது. இந்நிலையில் படக்குழுவினர் டீசரை வெளியிட்டு, இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். டீசரில் கதையின் நாயகனான ஏகன் -யோகி பாபு -பிரிகிடா .. ஆகியோர் யதார்த்தமாக நடித்திருப்பதால், இந்த படம் சீனு ராமசாமியின் வழக்கமான மண் மணம் கமழும் கிராமத்து படைப்பு என்ற முத்திரையுடன் தயாராகி இருக்கிறது என்பது தெரிய வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM