ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'தங்கலான்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகி இருக்கிறது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றி தங்கலானாக நடித்திருக்கும் சீயான் விக்ரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இயக்குநர் மணிரத்னம்.. ஆயிரம் ஆண்டிற்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களின் வரலாற்று தொடர்பான கதை... அந்த காலகட்டத்திய அரசர்களின் வாழ்வியல் -ஆடம்பரம் - வீரம் -வெற்றி- தோல்வி- போர்- என பல விடயங்களை பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அதே இந்தியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் மக்கள் பலர் வறுமையில் இருந்தனர். வாழ்வாதாரத்திற்காக சிரமப்பட்டனர் என்ற வேறு அசலான உலகத்தை முதன்மைப்படுத்தி பா. ரஞ்சித் உருவாக்கிய கதை தான் 'தங்கலான்'.
இந்தப் படத்தைப் பற்றி பலர் பலவிதமாக விமர்சனம் செய்யலாம். ஆனால் இது வேற மாதிரியான படம் என்பது மட்டும் உறுதி. ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை அளிக்கும்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM