(எம்.ஆர்.எம்.வசீம்)
வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில் நாட்டின் எதிர்காலத்துக்காக முன்வந்திருக்கும் ஒரே வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். அதனால் எந்த வேட்பாளரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாகப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலுக்காக நேற்றைய தினம் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். இந்த வேட்பாளர்களில் நாட்டுக்காக முன்வந்திருக்கும் ஒரே வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு சுயநல காரணங்களுக்கே போட்டியிடுகின்றனர்.
அதனால் நாட்டின் எதிர்காலம், மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட்டு வரும் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச்செய்ய மக்கள் அணி திறளவேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ரணில் விக்மரசிங்கவுக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகளில் இருந்து பலர் முன்வந்திருக்கின்றனர். இன்னும் பலர் வர இருக்கின்றனர்.
ஒருசில கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தாலும் அந்த கட்சிகளின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கின்றனர். அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் இன்னும் சிலர் எங்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் எதிர்வரும் சில நாட்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள்.
மேலும், அண்மையில் ஆசிய நிறுவனம் ஒன்று மேற்கொண்டிருந்த கணிப்பீட்டிலும் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த வேறு கணிப்பீடுகளின் அடிப்படையிலும் ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையில் இருக்கிறார்.
அதனால் ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 39 பேட்பாளர்களில் யாருமே ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாகப்போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகும். அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM