(ஸ்டெப்னி கொட்பிறி)
Plug-in Hybrid வாகனங்கள் மூலம் இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என BYD Auto Industry Co. Ltd, Auto Sales நிறுவனத்தின் (ஆசிய-பசுபிக்) பொது முகாமையாளர் Liu Xueliang தெரிவித்துள்ளார்.
இலங்கையில் BYD வாகனங்களின் விநியோகஸ்தரான John Keels CG Auto நிறுவனத்தின் தலைமையில் Plug-in Hybrid BYD SEALION 6 DM-i ரக கார்களை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு, கொழும்பில் உள்ள சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் புதன்கிழமை (14) இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய BYD Auto Industry Co. Ltd, Auto Sales நிறுவனத்தின் (ஆசிய-பசுபிக்) பொது முகாமையாளர் Liu Xueliang மேலும் தெரிவிக்கையில்,
பேட்டரிகள், மின்சார மோட்டார்கள், இலத்திரனியல் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் Automotive Grade Chips ஆகியவற்றின் தொழில்நுட்பங்கள் தொடர்பில் எமக்கு உள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களினால் புதிய ஆற்றல் வாகனங்களில் நாம் உலகளாவிய ரீதியில் முன்னணியாகக் காணப்படுகின்றோம்.
எமது அறிவையும் அனுபவத்தையும் இலங்கைக்கு வழங்குவதன் மூலம் இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் எமது பங்களிப்பும் காணப்படுவதை நினைத்து நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது Plug-in Hybrid வாகனமாக BYD SEALION 6 DM-i காணப்படுகின்றது. இலங்கையில் தற்போது நான்கு Plug-in Hybrid BYD SEALION 6 DM-i வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நான்கு Plug-in Hybrid BYD SEALION 6 DM-i வாகனங்களும் மக்கள் பார்வைக்காகக் கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைந்துள்ள காட்சியறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த Plug-in Hybrid BYD SEALION 6 DM-i வாகனங்கள் பேட்டரி மூலம் இயங்குவதால் எரிபொருள் செலவு குறைகிறது.
இந்த Plug-in Hybrid BYD SEALION 6 DM-i வாகனங்களில் உள்ள பேட்டரியானது பல கிலோ மீற்றர் தூரம் எந்தவித தடைகளும் இன்றி பயணங்களை மேற்கொள்வதற்கு உதவுகிறது.
இந்த Plug-in Hybrid BYD SEALION 6 DM-i வாகனங்களானது மேம்பட்ட மின்சார அடிப்படையிலான Dual Motor - Intelligence (DM-i) Plug-in Hybrid தொழில்நுட்பத்தைக் காட்டுகிறது. இது High-power motor drive மற்றும் Large-capacity Power battery என்பவற்றைக் கொண்டுள்ளது.
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பையும் பற்றாக்குறைகளையும் வைத்துப் பார்க்கும் போது இந்த Plug-in Hybrid வாகனங்கள் எரிபொருளை சிக்கனப்படுத்த உதவுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில், John Keells குழுமத்தின் தலைவர் Krishan Balendra கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எமது பங்களிப்பு காணப்படுவதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். BYD நிறுவனத்துடனான எமது கூட்டாண்மை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தொழினுட்ப ரீதியிலான வளர்ச்சியை இலங்கையில் அறிமுகம் செய்வதால் இலங்கையின் போக்குவரத்து அபிவிருத்தியில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதன் மூலம் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana Kumar Chaudhary கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் பொருளாதாரத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு எமது பங்களிப்பு எப்பொழுதும் காணப்படும். BYD நிறுவனம் மற்றும் John Keells குழுமத்துடன் இணைந்து செயற்படுவதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து இலங்கையை தொழினுட்ப ரீதியில் முன்னேற்ற பங்காற்றி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், BYD Auto Industry Co. Ltd, Auto Sales நிறுவனத்தின் பொது முகாமையாளர் Liu Xueliang, John Keells குழுமத்தின் தலைவர் Krishan Balendra மற்றும் CG Corp Global நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana Kumar Chudhary , ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
John Keells CG Auto Private Limited (JKCG) நிறுவனம் ஆனது John Keells Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 2023 இல் வாகனத் துறையில் பிரவேசித்த JKCG Auto நிறுவனம் இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். புதிய மின்சார வாகனங்களில் (NEV) வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், NEVகளுக்கான புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் மற்றும் இலங்கையில் EVகளுக்கான உட்கட்டமைப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
BYD நிறுவனம் என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD, தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளில் இயங்கி வருகிறது . BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகம் முதல் அதன் பயன்பாடுகள் வரை, zero-emission energy solutions வழங்குவதற்கு BYD அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதன் புதிய மின்சாரவாகனமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது.
John Keells Holdings நிறுவனம் ஆனது, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய குழும நிறுவனமாவதோடு, 7 வேறுபட்ட தொழில் ரீதியான துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 14,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு, LMD பத்திரிகையால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் 'மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்' என்ற தரவரிசையில் இடம்பெற்று வருகிறது. வெளிப்படைத் தன்மைக்கான சர்வதேச இலங்கை நிறுவனத்தின் 'நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டின் வெளிப்படைத் தன்மை' மதிப்பீட்டில் ஜோன் கீல்ஸ் தொடர்ச்சியாக நான்காம் ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபை உலக ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருப்பதுடன், ஜோன் கீல்ஸ் நிறுவனம் ஆனது தனது சமூக நல குறிக்கோளான “நாளைக்கான தேசத்தை வலுப்படுத்துதல்” - என்பதை அதன் சமூக சேவை மூலம் அடைய எத்தணித்து வருகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தினால் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதற்கு ‘Plastic Cycle’ மூலம் செயல்படுகின்றது.
140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட CG Corp Global நிறுவனம் ஆனது சிங்கப்பூரில் உள்ள குளோபல் எலெக்ட்ரிக் மொபிலிட்டி தலைமையகத்துடன் துபாயில் உள்ள ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமாகும். இன்று, இந்நிறுவனம் நேபாளத்தின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வணிக நிறுவனமாக வளர்ந்துள்ளது. தற்போது, CG Corp Global 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன் பல்வேறு வணிகத் துறைகளை உள்ளடக்கிய 32 நாடுகளில் செயல்படுகிறது. 2001 முதல் CG Corp Global, குறிப்பாக கொழும்பு தாஜ் சமுத்ரா, ஜெட் விங், CHC போன்ற முன்னணி ஹோட்டல்களுடன் இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. மேலும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு யூனியன் வங்கியின் ஊடாக நிதிச் சேவைத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.
(படங்கள் - ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM