தவ­றிய அழைப்பின் மூலம் அறி­மு­க­மான காத­லியைத் தேடி­வந்த இரா­ணுவ வீர­ரொ­ருவர் அக்­கா­த­லியின் 12 வய­தான மகளை வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்தி விட்டு தப்பிச் சென்ற சமயம் ஊர் மக்கள் பிடித்து நையப்புடைத்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த சம்­ப­வ­மொன்று கம்­பளை பிர­தே­சத்­தில் இடம்பெற்­றுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  இடம்பெற்ற இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரியவரு­வ­தாவது,

கம்­பளை அபுகஸ்பிட்­டிய பகு­தி­யைச்­சேர்ந்த விதவைப் பெண்­ணான குறித்த பெண் சில காலங்­க­ளுக்கு முன்னர் தனது தொலை­பே­சிக்கு வந்த தவ­றிய அழைப்பின் மூலம் அறி­மு­க­மான எம்­பிலிப்பிட்­டி­யைச்­ சேர்ந்த இரா­ணு­வத்தில் கட­மை­யாற்றும் இளைஞன் ஒரு­வ­ருடன் காதல் வயப்­பட்டு சித்­தி­ரைப்­ புத்­தாண்டு விடுமுறையின் போது தனது வீட்­டுக்கு வந்து தங்­கி­விட்டு போகு­மாறு அழைப்பு விடுத்­துள்­ள­தாக தெரியவரு­கி­றது 

இதற்­க­மைய  சம்­ப­வ­தினம் காத­லியைத் தேடி­வந்த குறித்த இரா­ணுவ வீரர், அன்றி­ரவு காத­லி­யுடன் தங்­கி­யுள்­ள­தோடு அதி­காலை காத­லியின் மக­ளான 12 வயது சிறு­மியை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்­பட்ட சமயம் ஊர­வர்­களுக்கு விடயம் தெரியவரவே  அந் நபரை பிடித்து நையப்புடைத்து கம்­பளை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.