மட்டக்களப்பு மண்முனை மேற்கில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

15 Aug, 2024 | 01:58 PM
image

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச பொதுமக்கள் இன்று வியாழக்கிழமை (15) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,  தமிழ் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

இந்த மதுபானசாலை ஆயித்தியமலை பகுதியில் திறக்கப்படவிருப்பதாகவும் இது திறக்கப்பட்டால் சமூக கலாசார சீர்கேடுகள், சமூக விரோத செயற்பாடுகள் அப்பகுதியில் இடம்பெறும் எனவும், பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

"மட்டக்களப்பின் அபிவிருத்தி மதுபானசாலையா”, “அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை அழிக்காதே”, “வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம்” போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி போன்றோருக்கான பிரதியிடப்பட்ட மகஜர் ஒன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்...

2024-10-04 02:25:10
news-image

வடமாகாண போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

2024-10-04 02:17:30
news-image

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை...

2024-10-04 02:12:15
news-image

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2024-10-04 02:00:44
news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43