பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (15) டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுக்கையில்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்.
அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள்
உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எப்போதும் எதிர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு நாட்டில் நிலைத்தன்மை உருவாக்கும் சதியுடன் செயல்படும் சிலரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சாதியவாதமும் சமூகத்திற்கு கேடாக உள்ளது.
இத்தகைய அரசியலில் இருந்து நாம் விடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM