ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 39 பேர் தகுதி : தேர்தல்கள் ஆணைக்குழு 

Published By: Digital Desk 3

15 Aug, 2024 | 01:22 PM
image

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் இதுவரை தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுயேட்சை வேட்பாளர் சரத் குமார குணரத்ன வேட்புமனு பத்திரத்தை சமர்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில், 

வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. நீதியான முறையில் தேர்தலை நடத்த வேட்பாளர்கள் ஒத்துழையுங்கள்.

தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் 3 வேட்பு மனுக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மூன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புக்களுடனான பிரச்சாரங்களை மேற்கொள்வதை சிவில் பிரஜைகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கும் ஊடகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

வேட்பாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00