(எம்.மனோசித்ரா)
சுய நல அரசியலுக்காகவே பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமன விவகாரத்தில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக்குள் தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையை உயர் கல்வி நிறுவனமாக்குவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்தியாவிடம் உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும், 5 வருட திட்டமிடலுக்கமைய அங்கு ஒரு முழுமையான பல்கலைக்கழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்புவதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி லோரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்த போதும் இதே நபரால் அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. சுயநலத்தின் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதற்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றேன். மலையகத்தில் பட்டதாரிகளுக்கான நியமனமும் ஒரு பிரச்சினையாகவுள்ளது.
ஒருபுறம் அவர்களுக்கான நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளை, மறுபுறம் உயர்தரத்தை நிறைவு செய்து தொழில் வாய்ப்பின்றியிருக்கின்ற இளைஞர்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக உதவி ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அங்குள்ள மக்களுக்கு கல்வி சார் தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அடுத்த அமைச்சரவை கூட்டத்துக்குள் இந்த பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.
கொட்டகலையிலுள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலையை ஒரே நாளில் பல்கலைக்கழகமாக மாற்ற முடியாது. எனது அமைச்சின் கீழ் சுமார் 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உயர் கல்வி நிறுவனத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் உத்தேசித்துள்ளோம்.
அந்த பகுதிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட மூலாதாரங்கள் அதிகளவில் கிடைக்கப் பெற்றால் நுவரெலியா மாவட்டத்தை சிறந்த கல்வி கேந்திரமாக மாற்ற முடியும்.
நுவரெலியா மாவட்டத்தில் கல்வி நிலை உயர்வடைந்தால் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். கொட்டகலையில் உயர் கல்வி நிறுவனத்தை உருவாக்கி அங்கு எவ்வாறான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது என்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சாத்தியக்கூறுகளை வழங்கியிருக்கின்றோம். எனவே 5 வருட திட்டமிடலுக்கமைய ஒரு முழுமையான பல்கலைக்கழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM