சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' பட அப்டேட்

14 Aug, 2024 | 03:56 PM
image

ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய சுதந்திர தினம் என்பதால் ரசிகர்களுக்கு பிரத்யேக காணொளியை சிவ கார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அமரன்' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சி. ஹெச் .சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகி இருக்கும் இந்த சுயசரிதை திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியன்று தீபாவளி வெளியீடாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் புதிய தகவல்களை பட குழுவினர் காணொளியாக வெளியிட்டுள்ளனர். ஓகஸ்ட் 15 ஆம் திகதியான நாளை இந்திய சுதந்திர தினம் என்பதால்... 'அமரன்' திரைப்படம்- இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரரை பற்றிய சுயசரிதை திரைப்படம் என்பதாலும்... இப்படத்தில் இடம்பெற்ற எக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் ' போர் செல்லும் வீரன் , ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் -பாரடா'  எனும் பின்னணியும் இசையாக ஒலிப்பதால் இந்த காணொளி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36