பொத்துவில் பிரதேச செயலகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், பொத்துவில் லிவர் பூல் விளையாட்டுக் கழகம் 2–0 என்ற கோல்கள் அடிப்படையில் பொத்துவில் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள முன்னணி கால்பந்தாட்ட விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், லிவர் பூல் விளையாட்டுக் கழக வீரர்கள் யெஹ்யாகான்இ ருசைக் ஆகியோர் தலா ஒரு கோலை போட்டனர்.

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸாரத்இ விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.ரிசான்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். வெற்றி வீரர்கள் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.