விஷ்ணு விஷால் வழங்கும் 'ஹாட் ஸ்பாட் 2'

Published By: Digital Desk 7

14 Aug, 2024 | 03:12 PM
image

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் 'ஹாட்.ஸ்பாட் 2' திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் வழங்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரத்யேக காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கலையரசன், சோபியா, கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி சாண்டி மாஸ்டர், ஜனனி ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி கண்டனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

அதன் பிறகு இந்த திரைப்படம் பட மாளிகைக்கான ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் தள ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும்? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் - தயாரிப்பாளர் கே. ஜே. பாலா மணி மார்பன் ஆகியோர் இணைந்து உருவாக்கும் 'ஹாட் ஸ்பாட் 2' திரைப்படத்தை முன்னணி நட்சத்திர நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

'காண்ட்ரவர்சியல் காவியம்' என குறிப்பிடப்பட்டிருக்கும் ஹாட் ஸ்பாட் படத்தின் அடுத்த பாகமும் டூ மச்சாக இருக்கும் என அறிவிக்கப்படடிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் , படப்பிடிப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36