யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் கைது

Published By: Digital Desk 7

14 Aug, 2024 | 09:34 AM
image

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் பிரபாகரன் அவர்களின் தலைமையில் கீழ் கொடிகாமம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தினேஸ் குணதிலக அவர்களுடன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளான எஸ்.ஐ.டிலான் சேமசிங்க, வியஜரட்ன மற்றும் தேவதாஸ் ஆகியோரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை (13)  அதிகாலை 4.30 மணியளவில் கிளாலி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த  டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31
news-image

இந்துமத அதியுயர் பீடத்தை நியமிக்கவுள்ள  இந்துமாமன்றம்

2026-09-08 01:07:11
news-image

எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பம்;...

2026-09-08 01:02:52