(நெவில் அன்தனி)
டப்ளின், செண்டிமவுன்ட், பெம்ப்ரோக் கிரிக்கெட் கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற இலங்கை - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியமான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 7 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை 1 - 1 என அயர்லாந்து சமப்படுத்திக்கொண்டது.
முதலாவது போட்டியில் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அயர்லாந்து மகளிர் அணி, கெபி லூயிஸ் குவித்த சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய 23 வயதான கெபி லூயிஸ் 75 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்து கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார்.
அத்துடன் இரண்டாவது விக்கெட்டில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்டுடன் 119 ஓட்டங்களை கெபி லூயிஸ் பகிர்ந்தார்.
ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 38 ஓட்டங்களைப் பெற்றார்.
அச்சினி குலசூரிய, ஷஷினி கிம்ஹானி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
174 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 166ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஆரம்ப விராங்கனை விஷ்மி குணரட்ன (1), 3ஆம் இலக்க வீராங்கனை ஹாசினி பெரேரா (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க 5ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் முதலாவது போட்டியில் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றிய ஹர்ஷித்தா சமரவிக்ரம இப் போட்டியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருந்தபோது அவர் ஆட்டம் இழந்தது இலங்கை மகளிர் அணிக்கு பேரிடியாக அமைந்தது.
44 பந்துகளை எதிர்கொண்ட ஹர்ஷித்தா சமரவிக்ரம 44 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து நிலக்ஷிகா சில்வா (10), அணித் தலைவி அனுஷ்கா சஞ்சீவனி (8), அமா காஞ்சனா (11), சச்சினி நிசன்சலா (0) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
மறுபக்கத்தில் கவிஷா டில்ஹாரி திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் இலங்கையினால் வெற்றிபெற முடியாமல் போனது.
பந்துவீச்சில் ஓர்லா ப்ரெண்டர்காஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரீயா சாஜன்ட் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி இரண்டு விருதுகளையும் கெபி லூயிஸ் வென்றெடுத்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM