(இராஜதுரை ஹஷான்)
கட்சியை கொடுத்து அரசியல் செய்ய போவதில்லை.கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறக்கப்பட்டுள்ளார்.விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைந்து கொள்ளலாம் என இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் செல்லவுமில்லை,கட்சியை விட்டுச் செல்லவுமில்லை.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தான் தற்போதும் உள்ளது. எமது அரசாங்கத்தில் நான் இருக்கிறேன்.
இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தலைமையில் இரத்தினபுரி மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.
நான் அதில் கலந்துக் கொண்டேன்.இதனை தொடர்ந்து நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்பட்டது.ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக நான் குறிப்பிடவில்லை.பேச்சுவார்த்தைக்கு சென்றதை ஆதரவளிப்பதாக கருத முடியாது.
கட்சியின் கொள்கைகளை காட்டிக் கொடுத்து அரசியல் செய்ய போவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் சென்றார்கள்.
கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறக்கப்பட்டுள்ளார்.ஆகவே விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். நெருக்கடியான சூழ்நிலையின் போது விலகிச் செல்வது முறையற்றது என்பதை அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM