(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
'இங்கிலாந்தின் சூழ்நிலைகளின் உள்ளார்ந்த நுணுக்கங்களை நன்கு அறிந்த ஒருவர் இலங்கை வீரர்களுக்கு உதவவே இயன் பெல்லை நியமித்தோம்' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியஷன்ஷிப் தொடரில் இலங்கை விளையாடவுள்ளது.
இந்தத் தொடர் ஆகஸ்ட் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இயன் பெல் தனது துடுப்பாட்டப் பயிற்றுநர் பணியை ஆகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளார்.
2020இல் ஓய்வு பெற்றதிலிருந்து பெல் ஒரு முழுமையான பயிற்றுநராக பணியாற்றிவந்தார்.
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து ஆண்கள் அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆகியவற்றின் பயிற்றநராகவும் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணியின் உதவிப் பயிற்றநராகவும் டார்பிஷயரில் துடுப்பாட்ட ஆலோசகராகவும் 2023 உலகக் கிண்ணத்திற்கு (50 ஓவர்) முன்னர் நியூஸிலாந்து ஆண்கள் அணியின் உதவிப் பயிற்றுநராகவும் இயன் பெல் பணியாற்றியிருந்தார்.
இயன் பெல்லின் அனுபவபூர்வமான நிபுணத்துவத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு எதிராக 10 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடர் வெற்றியை ஈட்ட முடியும் என இலங்கை நம்புகிறது.
மூன்று டெஸ்ட் போட்டிகளும் மெஞ்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கு (ஆகஸ்ட் 21 - 25), லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கு (ஆகஸ்ட் 29 - 2), லண்டன் கியா ஓவல் விளையாட்டரங்கு (செப்டெம்பர் 6 - 10) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM