18 ஆயிரம் கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

13 Aug, 2024 | 09:02 PM
image

மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் வசிக்கும்  44 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 18 ஆயிரம் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21