'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட நடிகர் ராஜ்குமாரின் 'இரானி' பட முன்னோட்டம்

13 Aug, 2024 | 09:06 PM
image

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜ்குமார். அதன் பிறகு ஏராளமான வெற்றி பெற்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இவர் தற்போது கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இரானி' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

இயக்குநர் ஜெகன் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இரானி' எனும் திரைப்படத்தில் ராஜ்குமார், ஜெயானி வீர சிங்கே, ரெஜினா கிறிஸ்டோபர், சஹான் தேவா, தனு இன்னாசிதம்பி, அனில் ஜெய சிங்கே, ஹரி மணிகண்டன், சஃபீனா பானு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ஜெயரட்ன ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருள் தன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை போஸ்ட்மேன் பிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஷ்ணு பிரசன்னா & ஜெகன் சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.   

இலங்கை மற்றும் இந்திய கலைஞர்களின் கூட்டுறவில் தயாராகி இருக்கும் 'இரானி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்திய கலைஞரான ராஜ்குமார் இரானி எனும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். எம்முடைய மண்ணில் நிகழ்ந்த சம்பவங்களை பின்னணியாக கொண்டு சர்வதேச தரத்துடன் தயாராகி இருக்கும் இந்த முன்னோட்டம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'

2024-09-07 15:08:05
news-image

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் முதல்...

2024-09-07 15:02:33
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட்...

2024-09-07 14:47:15
news-image

திரையிசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மீசை...

2024-09-06 14:38:06
news-image

'தலைவெட்டியான் பாளையம்' புதிய நகைச்சுவை இணைய...

2024-09-06 13:16:44
news-image

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 'தேவரா பார்ட்...

2024-09-05 19:09:14
news-image

யோகி பாபு வெளியிட்ட 'ஜாலி ஓ...

2024-09-05 18:09:33
news-image

தி கிரேட்டஸ்ட் ஒஃப் ஆல் டைம்...

2024-09-05 17:59:12
news-image

புது பிக்பொஸ் விஜய் சேதுபதி 

2024-09-05 14:21:00
news-image

புதுமுக நடிகர் அத்வே நடிக்கும் 'சுப்ரமண்யா'...

2024-09-04 17:56:46
news-image

மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின்...

2024-09-04 17:53:06
news-image

அவல நகைச்சுவை படைப்பாக தயாராகும் 'நிர்வாகம்...

2024-09-04 17:50:39