தமிழ் திரையுலகில் கலை சேவை செய்து வரும் சர்வதேச நட்சத்திர நடிகரான 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகி, எதிர்வரும் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் அவர் பாடிய 'அறுவடை' பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் படக்குழுவினர் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், டீசர் , முன்னோட்டம் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'கிழக்கு வெளுத்திருச்சு சூரியன் மின்னிருச்சி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. வயலும் வயல் சார்ந்த பகுதியுமான மருத நில பின்னணியில் கடந்த நூற்றாண்டில் தமிழர்கள் வயல்வெளிகளில் அறுவடை செய்த கால கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. பாடலாசிரியை உமா தேவி இந்தப் பாடலை எழுத, சீயான் விக்ரம் -சிந்தூரி விஷால்- மதிச்சயம் பாலா -சுகந்தி- ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷின் மயக்கும் இசையில் இந்த பாடல் உழவர்களின் உள மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன் .. அந்த காலகட்டத்தைய சமூக நிலையையும் காட்சிப்படுத்தி இருப்பதால் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM