நடிகர் சூரியின் வித்தியாசமான குரலால் கவனம் ஈர்க்கும் 'கொட்டுக்காளி' பட முன்னோட்டம்

13 Aug, 2024 | 05:49 PM
image

'விடுதலை பார்ட் 1', 'கருடன்' ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கொட்டுக்காளி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- மிஷ்கின் -பாலாஜி சக்திவேல்- லிங்குசாமி -உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். 

'கூழாங்கல்' எனும் சர்வதேச விருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டுக்காளி' எனும் திரைப்படத்தில் சூரி, நடிகை அன்னா பென் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பி. சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஒலி வடிவமைப்பை ஜி .சுரேன் மற்றும் எஸ். அழகிய கூத்தன் ஆகியோர் மேற்கொண்டிருக்கிறார்கள். மண் சார்ந்த வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த திரைப்படத்தை எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான சிவ கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். 

எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி வித்தியாசமான குரலில் பேசி நடித்திருக்கிறார். படத்தில் பின்னணி இசையில்லை என்றாலும் .. படத்திற்கான ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலி கலவை நேர்த்தியாகவும் , யதார்த்தத்துடனும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்த முன்னோட்டத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களும், பார்வையாளர்களும் பார்வையிட தூண்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08