ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலர் சாதனம் பாதுகாப்பானதா..!?

13 Aug, 2024 | 05:44 PM
image

இன்றைய சூழலில் ஆஸ்துமா நோயாளிகள் தங்களுடைய மூச்சு திணறல் பாதிப்பிற்கு உடனடியாக நிவாரணம் பெறுவதற்கு வைத்தியர்கள் இன்ஹேலர் எனும் மருத்துவ சாதனத்தை பாவிக்குமாறு அறிவுறுத்தி இருப்பார்கள். இந்நிலையில் எம்மில் சிலர் இத்தகைய இன்ஹேலரை தொடர்ச்சியாக பாவிப்பது ஆரோக்கியமானதா? இல்லையா? அல்லது ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என சந்தேகம் கொள்கிறார்கள். இந்நிலையில் இது குறித்த விளக்கத்தை வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள். 

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மாத்திரைகள் மூலம் நிவாரணம் வழங்குவதை விட, பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நேரடியாக நுரையீரலுக்கு மருந்தினை வழங்கும் கையடக்க சாதனமான இன்ஹேலரை பாவிப்பது சிறப்பானது. ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கும், சுவாசம் சீரடைவதற்கும் இன்ஹேலர் எனும் சாதனம் மூலமாக மருந்தை உட்கொள்வது உடனடியாக நிவாரணத்தை தருகிறது. மேலும் இன்ஹேரைப் பயன்படுத்தும் போது மருந்து நேரடியாக நுரையீரலுக்குள் செல்வதால் நிவாரணம் கிடைக்கிறது. 

அதே தருணத்தில் நீங்கள் எந்த வகையினதான இன்ஹேலரை பயன்படுத்த வேண்டும் என்பதனை சுகாதார வல்லுநரின் ஆலோசனையையும், வழி காட்டலையும் பெற வேண்டும்.  ஏனெனில் இன்ஹேலர் எனும் கருவியில் பல வகைகள் உண்டு. அளவிடப்பட்ட மருந்துகளை கொண்ட இன்ஹேலர்கள், உலர வைக்கப்பட்ட மருந்துகளை கொண்ட இன்ஹேலர்கள், மென்மையான பனி போல் புகையுடன் கூடிய இன்ஹேலர்கள் என பல வகை இருக்கிறது. இவற்றில் உங்களுடைய ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சரியான மருந்தினை கொண்ட இன்ஹேலர்கள் எது? என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும். 

சில தருணங்களில் சிலருக்கு இன்ஹேலர் எனும் சாதனத்தின் மூலமாக நிவாரணம் போதவில்லை என்றாலோ அல்லது கட்டுக்குள் இல்லை என்ற நிலை ஏற்பட்டாலோ.. வைத்தியர்கள் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு, உடல் நிலையை கருத்தில் கொண்டு , நெபுலைசர் எனும் கருவியின் ஊடாக ஆஸ்துமா பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சையை பெற பரிந்துரைப்பார்கள். 

வைத்தியர் தீபா செல்வி ; தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20
news-image

“நல்ல மருத்துவர்” என்பவர் யார்?

2024-09-02 14:52:00
news-image

குழந்தைகளின் இதய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-08-31 16:55:30
news-image

முதுகு வலிக்கான நவீன நிவாரண சிகிச்சை

2024-08-29 19:52:57
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-08-28 17:07:29
news-image

அல்சைமர் நோயால் ஆசிய நாட்டவர்கள் பலர்...

2024-08-28 17:11:08
news-image

மூளையில் ஏற்படும் கொலாய்டு நீர்க்கட்டி பாதிப்பிற்கான...

2024-08-27 17:42:14
news-image

இரத்த நாள அடைப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-08-26 17:26:59
news-image

ஃபுல்மினன்ட் ஹெபடிக் ஃபெயிலியர் எனும் கடுமையான...

2024-08-24 15:45:46