(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் எதிர்காலம் வளம்பெற வேண்டும் என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற வேண்டும். இல்லாவி்ட்டால் நாடு மீண்டும் பழைய நிலைக்கே செல்லும். மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க ஏற்பாட்டாளர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
2019 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரசாரங்களின்போது இந்த விடயங்களை மக்களுக்கு நாங்கள் தெளிவாக தெரிவித்தோம். என்றாலும் அன்று மக்கள் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. இறுதியாக நாடு வங்குராேத்து அடைந்தது.
நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதற்கான வேலைத்திட்டமும் அவருக்கு அவருக்கு இருந்தது. அதனால்தான் குறுகிய காலத்தில் நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எதிர்கொண்டுவந்த துன்பங்களை மக்கள் மறந்துவிட முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம், ஆளுமையினாலே நாடு இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.
அதேநேரம் ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் பல தடவைகள் நாட்டின் பிரதமராக இருந்து எதனையும் செய்யவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர். பிரதமராக இருந்து அவரால் ஜனாதிபதியை மீறி செயற்பட முடியாது. அதனால் சில தீர்மானங்களை அவரால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் ஜனாதிபதியாக இருந்து எடுத்த தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மீள முடியுமாகி இருந்தது.
அதனால் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். சஜித் பிரேமதாசவோ அநுரகுரா திஸாநாயக்கவோ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்து, கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM