ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு - முடிவை அறிவித்தார் ராஜித

13 Aug, 2024 | 09:16 PM
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ராஜித சேனாரத்ன செவ்வாய்க்கிழமை (13) ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் வைத்து உத்தியோகபூர்வ அறிவிப்பில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டில் வறுமையை ஒழித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தந்துள்ளார் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார். நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டம் சர்வதேச வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடதுசாரி முகாமை பிரதிநிதித்துவப்படுத்தி தான் அரசியலில் பிரவேசித்ததாகவும், அரசியல் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் தெரிவித்த அவர், அந்த தீர்மானங்கள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்காக எடுக்கப்பட்டவை என்றும், சில சமயங்களில் தான் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப தாம் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணிப்பதாகவும் எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை  பெருவெற்றியாக்குவதற்கு மீண்டும் தாய்வீட்டுக்கு வந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய பொருளாதார கட்டமைப்புடன் புதிய அரசியல் கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தன்னைப் போலவே  தீவிர சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தன்னுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய முரத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,   தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணாயக்கார, ரவி கருணாநாயக்க  , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஜகத் பிரியங்கரவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இன்று (13) இணைந்தார்.

ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாகவே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் நலனுக்காக அந்த வேலைத்திட்டத்திற்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை...

2024-09-16 18:20:25
news-image

நானுஓயாவில் சொகுசு கார் விபத்து :...

2024-09-16 18:27:30
news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21