பஞ்ச பூதங்களில் வாயு அல்லது காற்று என்பதும் ஒன்று என அனைவரும் அறிந்திருப்பர். எம்முடைய ஜாதகத்தில் காற்று சார்ந்த லக்னம் என மிதுனம் - துலாம் - கும்பம் - ஆகிய மூன்று லக்னங்களை எம்முடைய முன்னோர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இந்த மூன்று லக்னத்தை சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சூட்சமங்களையும் எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இந்த மூன்று லக்னங்களிலும் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை -சுவாதி - சதயம் - என மூன்று நட்சத்திரங்களும், அதன் நான்கு பாதங்களும் முழுமையாக இடம் பிடித்திருப்பதால் இந்த மூன்று லக்னத்திற்கும் லக்னாதிபதி புதன் - சுக்கிரன்- சனி என்றிருந்தாலும் ராகு பகவான் தான் ஆதிக்கம் செலுத்துவார்.
அதிலும் மிதுனம் மற்றும் துலாம் லக்னத்தில் உள்ளவர்களுக்கு ராகு பகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். கும்ப லக்னத்தில் சனியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இருந்தாலும் ராகுவின் சாதுரியமான ஆதிக்கமும் இங்கு உண்டு.
காற்று ராசி என்பதால் இவர்களுக்கு ஆயுள் முழுவதும் அறிமுகமற்ற நபர்களின் மூலம் அதாவது குறுகிய கால கட்டத்திற்கு மட்டுமே அறிமுகமாகும் நபர்கள் மூலம் ஆதாயமும் உண்டு. அபாயமும் உண்டு. அதனால் வாழ்க்கையை எப்போதும் இப்படித்தான் இருக்கும் என உறுதியான உறுதியாக கற்பிதம் செய்து கொண்டு வாழாமல் வாழ்க்கையை அதன் போக்கில் நிதானமாக வாழ கற்றுக் கொண்டால் வெற்றியும், மன அமைதியும் கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ள ராகுவின் பலன்களுக்கும், சுவாதி நட்சத்திரத்தில் உள்ள ராகுவின் பலன்களுக்கும், சதயம் நட்சத்திரத்தில் உள்ள ராகுவின் பலன்களுக்கும் வித்தியாசம் உண்டு. இதனை உணர்ந்து மூன்று லக்னக்காரர்களும் பேராசைப்படாமல் தங்களின் நிலை உணர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
துலாம் லக்ன காரர்கள் வணிகத்தில் ஈடுபட்டால் சிறந்த தொழிலதிபராக உயர முடியும். ஆனால் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் எதிர் பாலினத்தவர்களுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும் . அத்து மீறினால் உங்களது வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்று விடும்.
கும்ப லக்னத்துக்காரர்கள் மது மற்றும் மாமிசத்தை முற்றாக தவிர்க்க வேண்டும். இவர்களும் உடன் பணிபுரியும் எதிர் பாலினத்தவர்களுடன் நட்புடன் பழகினாலும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கணினி சார் தொழில்கள், தகவல் தொடர்பு துறை, நானோ தொழில்நுட்பம் போன்றவற்றில் ஈடுபட்டால் லாபம் தொடர்ச்சியாக கிடைத்து வரும். மேலும் இவர்கள் லட்சுமி நரசிம்மர்- புற்று மாரியம்மன் அல்லது புற்று கோவில் - ஆஞ்சநேயர் - மகாவிஷ்ணு- மகாலட்சுமி - துர்க்கை அம்மன் - காளி தேவி - ஆகியோரை பிரத்யேகமாக வழிபட்டால் முன்னேற்றம் உறுதி. மேலும், இவர்களை வழிபடும் முறையை ஆன்மீக பெரியோர்களிடம் கற்று, இந்த தெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது வாழ்க்கை முழுவதும் வெற்றிகளால் நிரம்பி உற்சாகத்துடன் வாழ்க்கையை நடத்திச் செல்வீர்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM