(எம்.மனோசித்ரா)
நீர் கட்டண சூத்திரத்துக்கமைய கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற தோட்ட வீடுகள் தவிர்ந்த வீட்டு அலகுகள் வீட்டு அலகுகள், அரச மருத்துவமனைகள், பாடசாலைகள், வணக்கத்தலங்களுக்கு நீர்க்கட்டணங்களைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (13) செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக கடந்த ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜூலை 16ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் விலை மற்றும் கேள்வி குறைவடைந்திருப்பதைக் கவனத்திற் கொண்டு நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தில் குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது.
அதற்கமைய, பின்வரும் வகையில் நீர்க்கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற தோட்ட வீடுகள் தவிர்ந்த வீட்டு அலகுகள் வீட்டு அலகுகளுக்கு 7 வீதத்தாலும், அரச மருத்துவமனைகளுக்கு 4.5 சதவீதத்தாலும், பாடசாலைகள் மற்றும் வணக்கத்தலங்களுக்கு 6.3 சதவீதத்தாலும் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM