ஜனாதிபதியை சந்தித்தனர் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள்

Published By: Digital Desk 3

13 Aug, 2024 | 03:51 PM
image

தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (12)  மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் வேந்தன் மற்றும் செயலாளர் துளசி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலிலே,  இந்த சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை  சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.

இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் ரணில் விக்ரமசிங்க,  தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை  தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர்.

இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான  சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும்  தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு  எட்டப்பட்டுள்ளது என்பது தெளிவு படுத்தப்பட்டது.  ஜனாதிபதி தரப்பில் சமஸ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க பாராளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாக பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுவரைக்கும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப் பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அதற்காக தன்னிடம்  தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளடங்கிய ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்தார்.  ஏற்கனவே மாகாண சபையின் பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மீள வழங்குவதாகவும், நிதி உட்பட  மேலதிக அதிகாரங்களையும் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவையும் மாகாண சபை கொண்டிருக்கும்  எனக்கும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சார்பில்,  காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி,  எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை,  காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது,  தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது,  விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய  மீனவர்களுடைய  அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம், உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.

இதற்கான தீர்வுகளை தான் நிச்சயமாக வழங்குவதாகவும் ஏற்கனவே சில விடயங்களுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் தொல்லியல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  தான் சமர்ப்பித்த ஆவணத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும்,  அவற்றைப் பரிசீலித்த பின்னர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கு  முகமான மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமது தரப்பிலும் தயாராக இருப்பதாக சொல்லிய தமிழ் தரப்பினர்,  அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து கருத்து தெரிவிப்பதாக கூறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில்...

2024-09-15 12:17:33
news-image

தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து...

2024-09-15 12:05:57
news-image

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்...

2024-09-15 11:59:35
news-image

ஹாலிஎல தனியார் காணியொன்றில் கைக்குண்டு கண்டெடுப்பு 

2024-09-15 11:42:22
news-image

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டின் ஐக்கியத்துக்கு...

2024-09-15 11:44:05
news-image

அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில்...

2024-09-15 11:07:09
news-image

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில்...

2024-09-15 12:22:52
news-image

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை...

2024-09-15 10:20:20
news-image

அரசியல் நலன்களை அடைய சிலர் வன்முறை...

2024-09-15 09:52:57
news-image

4 கிலோ நிறையுடைய அம்பருடன் ஹம்பாந்தோட்டையில்...

2024-09-15 09:50:46
news-image

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழரசு கட்சியின்...

2024-09-15 09:45:14
news-image

இன்றைய வானிலை 

2024-09-15 06:06:47