(எம்.ஆர்.எம்.வசீம்)
ஊடக பிரசாரங்களையும் அனுபவமில்லாத அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளுக்கும் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. தேர்தலில் மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் அதன் பெறுபேற்றை மக்களே அனுபவிக்க நேரிடும். அதனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்காவது சந்தர்ப்பம் வழங்க மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுத்து, முன்னெடுத்துச்செல்லும் சந்தர்ப்பத்தில் மிகவும் தீர்மானமிக்க தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளோம். நாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல யார் பொருத்தம் என்பதை தெரிவு செய்வதற்கு தற்போது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் மக்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுத்திருந்தார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் பிழையான ஒருவரை தெரிவுசெய்ததன் மூலம் நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.
அதனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வேட்பாளரின் பிரபல்லியம். ஊடக பிரசாரம், பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிடாமல், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்துள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
அவரின் அரசியல் அனுபவமும் ஆளுமை காரணமாகவே குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருக்கிறது. நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தொடர்ந்து கொண்டு சென்றால் மாத்திரமே, நாடு மீண்டும் வீழ்ச்சியடையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். மக்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஒரு கொள்கையின் அடிப்படையிலே செயற்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலின்போதும் நாங்கள் உண்மையை தெரிவித்தோம். என்றாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் எங்களை நிராகரித்தனர். இறுதியில் நாட்டு மக்களே கஷ்டத்தில் விழுந்தனர்.
அதனால் இந்த தேர்தலில் எமது எதிர் வேட்பாளர்களின் கூட்டங்களில் காணும் மக்கள் கூட்டங்களை பார்த்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவர் இருந்திருந்தால் பங்களாதேஷுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ரணில் விக்ரமசிங்க போன்ற அனுபவமிக்க ஒருவரை இனி ஒருபோதும் தேடிக்கொள்ள முடியாது.
அதனால் நாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல ரணில் விக்ரமசிங்கவுக்கு மேலும் 5வருடங்களுக்காவது மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். உலக நாடுகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகளை பயன்படுத்திக்கொண்டு நாட்டை முன்னேற்றுவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பார்.
எனவே மக்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்த தேர்தலில் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். பிழையான தீர்மானம் எடுத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM