கடந்த 2023 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் கடும் வெப்பத்தால் தெற்கில் உள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு 47,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.
இதனை திங்கட்கிழமை (12) ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் (ஐஎஸ்குளோபல்) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகிலேயே அதிகளவான வெப்பம் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டத்தில் ஐரோப்பியர்கள் வாழ்வதோடு, உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர்.
35 ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுத்த ஆராய்ச்சியில் அதிக வெப்பநிலையால் 47,690 பேர் உயிரிழந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அதில், கிரீஸ், பல்கேரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில் கடும் வெப்பத்தால் 60,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் குறைந்தளவானவர்களே உயிரிழந்துள்ளனர்.
இதற்கு கடந்த 20 ஆண்டுகளில் கடும் வெப்பநிலையை எதிர்த்து போராடுவதற்கு எடுத்த நடவடிக்கையே காரணமாகும். இல்லாவிடின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்திருக்கும்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM