உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஷக்கிப் அல் ஹசன்

Published By: Digital Desk 7

13 Aug, 2024 | 12:05 PM
image

(நெவில் அன்தனி)

இந்த வருடம் நடைபெறவுள்ள சகல டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷின் சிரேஷ்ட சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் விளையாடுவார் என தலைமை தேர்வாளர் காஸி அஷ்ரவ் ஹொசெய்ன் உறுதி செய்துள்ளார்.

'ஜூலை மாத இறுதியில் ஷக்கிப் அல் ஹஸனுடன் நாங்கள் கலந்துரையாடினோம். அவரது உடற்தகுதி குறித்து என்னிடம் பலர் பேசினர்' என பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக ஹொசெய்ன் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரடாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் ஆகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள ஷக்கிப் அல் ஹசன் முக்கிய சகலதுறை வீரர் பாத்திரத்தில் விளையாடவுள்ளார்.

'கிரிக்கெட் உலகில் திறமைவாய்ந்த சகலதுறை வீரர்களில் ஷக்கிப் ஒருவராவார். அதனை நான் தொடர்ந்து ஏற்றுக்கொண்டுவருகிறேன். அவரை ஒரு பந்துவீச்சாளராக மட்டும் கருதுவதற்கு என்னால் முடியாது' எனறார் ஹொசெய்ன்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தலைமையில் 16 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த குழாத்தை பங்களாதேஷ் தேர்வுக் குழு பெயரிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, உலக டெஸ்ட் சம்பியின்ஷிப் அணிகள் நிலையில் பாகிஸ்தான் 22 புள்ளிகளைப் பெற்ற 36.66 சதவீத புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் பங்களாதேஷ் 12 புள்ளிகளைப் பெற்ற 25.00 சதவீத புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும் இருக்கின்றன.

பங்களாதேஷ் குழாம்

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மஹமுதுல் ஹசன் ஜோய், ஸக்கிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக், முஷ்பிக்குர் ரஹிம். ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அஹ்மத், சய்யத் காலித் அஹ்மத்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56