ஒலிம்பிக்கின் மிகவும் கவர்ச்சிகரமான வீராங்கனை என வர்ணிக்கப்பட்ட பராகுவேயின் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா பொருத்தமற்ற சூழலை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒலிம்பிக்கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பார்கள் அவர்கள் அங்கு ஒருவருடன் ஒருவர் பழகுவார்கள்,பயிற்சியெடுப்பார்கள், ஒன்றாக உணவருந்துவார்கள் நேரத்தை செலவிடுவார்கள்.
எனினும் பராகுவே தனது வீராங்கனைகளில் ஒருவரை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றியுள்ளது.
பராகுவேயின் நீச்சல் வீராங்கனை லுவானோ அலோன்சா அரையிறுதிக்கு தகுதி பெற தவறிய ஒருவர்.
இன்ஸ்டாவில் 500,000 பேரால் பின்தொடரப்படும் அவர் பின்னர் தீடீரென தனது ஓய்வினை அறிவித்தார்.
ஆனால் அதன் பின்னரும் அவர் பரிசின் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்தார் - போட்டிகள் முடிவடைந்த பின்னரும் 11 ம் திகதிகள் வரை வீரர்கள் வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டார் என குற்றம்சாட்டி பராகுவே அணி முகாமையாளர்கள் இவரை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
எனினும் அவரது பொருத்தமற்ற நடவடிக்கை என்னவென்பது குறித்து விளக்கம் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.
அவரது பிரசன்னம் அணிக்குள் பொருத்தமற்ற சூழலை உருவாக்குகின்றது என அணியின் ஒலிம்பிக்கிற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM