கிரீஸில் காட்டுத் தீ ; ஒருவர் பலி

Published By: Digital Desk 3

13 Aug, 2024 | 01:52 PM
image

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவிய பாரிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடக்கு ஏதென்ஸில் உள்ள வ்ரிலிசியா நகரிலுள்ள கடையொன்றில் இருந்து காட்டுத் தீயில் எரிந்த நிலையில்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஏதென்ஸின் வடக்கே 35 கிலோ மீற்றர் (22 மைல்) தொலைவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு  தீயணைப்பு வீரர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீப் பரவல் இவ்வாரம் முழுவதும் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

700 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 199 தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் 35 நீர்குண்டு வீச்சு விமானங்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. 

இரண்டு தீயணைப்பு வீரர்கள் தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வசிலியோஸ் வத்ரகோஜியானிஸ் தெரிவித்துள்ளார்.

40 இடங்களில் திங்கட்கிழமை தீ பற்றி எரிந்துள்ளதாகவும், சுமார் 82 அடி உயரத்துக்கு தீ கொளுந்துவிட்டு எரிவதையும், இரவில் மின்னல் போல தீப்பிழம்புகள் காட்சியளிப்பதாகவும் நேரில் பார்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை மாலை வரை சுமார் 100,000 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என கிரீஸ் தேசிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதனால் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு புகை மூட்டுள்ளதால் மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள முகக்கவசங்களை அணிந்துள்ளனர்.

கிரிஸில் பரவும் காட்டுத்தீயை அணைக்க பல நாடுகள்  உதவ  முன்வந்துள்ளன.

அதன்படி, ஐரோப்பிய நாடுகள் உதவிகளளை வழங்க முன்வந்துள்ளன.

இத்தாலி இரண்டு விமானங்களையும், பிரான்ஸ் மற்றும் செர்பியா தலா ஒரு ஹெலிகொப்டரையும் வழங்குகின்றன.

ஸ்பெயின், செக் குடியரசு மற்றும் ருமேனியா ஆகியவை வாகனங்கள், பணியாளர்கள் மற்றும் உதவிகளை அனுப்புகின்றன.

அண்டைய நாடான துருக்கியும் இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டரை அனுப்ப தயாராகி வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிரீஸில் பேரழிவு மிக்க காட்டுத் தீயை எதிர்த்து போராடுவதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் என  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் கடந்த  ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவியுள்ளது.

காலநிலை மாற்றம் வெப்பமான, வரட்சியான வானிலையின் அபாயத்தை அதிகரிப்பதால், இது காட்டுத்தீ ஏற்படுவதற்கு எரிபொருளாக இருக்கிறது.

[Angelos Tzortzinis/AFP]

[AP Photo/Derek Gatopoulos]

[Angelos Tzortzinis/AFP]

 [Angelos Tzortzinis/AFP]

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித...

2024-09-07 13:44:57
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க...

2024-09-07 09:48:04
news-image

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி...

2024-09-07 09:27:53
news-image

கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ;...

2024-09-06 13:37:54
news-image

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி...

2024-09-06 10:26:35
news-image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக...

2024-09-05 16:25:51
news-image

ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை...

2024-09-05 17:00:20
news-image

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம்...

2024-09-05 11:02:38
news-image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு...

2024-09-05 06:26:56
news-image

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய...

2024-09-04 16:33:57
news-image

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு...

2024-09-04 12:19:41
news-image

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி...

2024-09-04 10:31:05