13 வயது பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தனியார் பஸ் நடத்துனர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் ஹொரணை ரெமுன பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் மற்றயவர்கள் களுத்துறை, டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி தனது சுகயீனமுற்ற பெற்றோர் மற்றும் மூத்த சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இந்த பாடசாலை மாணவியிடம் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பணம் மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி மாணவியை இரண்டு வருட காலமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM