ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரண்டரை வருடகால யுத்தத்தில் முதல்தடவையாக உக்ரைன் படையினர் ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை உக்ரைன் படையினர் தங்கள் கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் தொடர்ந்தும் இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா யுத்தத்தை ஏனையவர்களின் வாசலிற்கு கொண்டு சென்றது தற்போது அது ரஸ்யாவின் வாசலிற்கு சென்றுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலிடெமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதலை பாரிய தூண்டும் நடவடிக்கை என வர்ணித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிலிருந்து உக்ரைன் படையினரை உதைத்து வெளியே அனுப்பபோவதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து பெருமளவு மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை தீடீர் தாக்குதலொன்றை ஆரம்பித்த உக்ரைனிய படையினர் அடுத்த சில நாட்களில் 30 கிலோமீற்றர் முன்னேறினர்.
இந்த தாக்குதல் உக்ரைனிய படையினரின் மனோநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த தந்திரோபாயத்தினால் ஆபத்துக்கள் உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த தாக்குதலினால் கடும் சீற்றமடைந்துள்ள ரஸ்யா உக்ரைனின் உட்கட்டமைப்புகள் பொதுமக்கள் இலக்குகள் மீது கடும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிரிட்டனின் இராணுவவட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.
தொலைகாட்சிக்கு கருத்து வெளியிட்டுள்ள விளாடிமிர் புட்டின் எதிரியின் முக்கிய நோக்கம் விரோதத்தை விதைப்பது,சச்சரவு செய்வது மக்களை அச்சுறுத்துவது ரஸ்ய சமூகத்தின் ஒற்றுமையை அழிப்பது என தெரிவித்துள்ளார்.
எங்கள் பகுதியிலிருந்து எதிரியை வெளியேற்றுவதே பாதுகாப்பு தரப்பினரின் முக்கிய நோக்கம் என அவர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார்.
121,000 பேர் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் சுமார் 2000 ரஸ்யபொதுமக்கள் உள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது என புட்டின் தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஜன்னல்கள் இல்லாத உறுதியான சுவர்களை கொண்ட அறைகளில் மக்கள் பாதுகாப்பு தேடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM