(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பிரபாகணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணி செவ்வாய்கிழமை (13) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திடவுள்ளது.
கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் மாலை நான்கு மணியளவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரபாகனேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணிக்கும் இடையே இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திட படவுள்ளது.
மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகள் உட்பட பதிவு செய்யப்படாத கட்சிகளும் சிவில் அமைப்புகள் உட்பட மொத்தம் 28 அமைப்புகளின் தலைவர்களும் இவ் உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றனர்.
கடந்த 8ஆம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணி கைசாத்திடும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது. பிரபா கணேஷன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதா தெரிவித்திருந்த போதிலும், அன்றைய தினம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளால் அன்றைய தினம் பிரபா கணேஷன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM