சஜித் வெற்றி கனியை சுவைப்பது திண்ணம் - ஐ.ம. சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஜயந்த ரட்ணாயக்க

Published By: Vishnu

12 Aug, 2024 | 09:13 PM
image

சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கனியைப் பெறுகின்றமை உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை  மாவட்ட அமைப்பாளரும், அம்பாறை மாவட்டத்தின் ஓய்வு நிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஜயந்த ரட்ணாயக்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அவை தலைவர் சந்திரதாஸ கலப்பதியின் அம்பாறை இல்லத்தில் திங்கட்கிழமை (12) ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்துக்கான உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டம் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியில் அண்மையில் இணைந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ அடங்கலாக கட்சியின் மாவட்ட  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த பிற்பாடு  ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது ஜயந்த ரட்ணாயக்க மேலும் தெரிவித்தவை வருமாறு

தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கண்மணி ஆவார். இனம், மதம், மொழி, சாதி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால்  எல்லா மக்களையும் அரவணைத்து நடப்பவர். அனைத்து இன மக்களும் சேர்ந்து எமது நாட்டின் தலைமைத்துவத்தை அவரிடம் ஒப்படைக்கும் காலம் மலர்ந்துள்ளது.

எமது தலைவர் சஜித் பிரேமதாஸ ஏழைகளின் நண்பன். பாட்டாளிகளின் கூட்டாளி. அவர் சொல்வதை செய்பவர். செய்வதை சொல்பவர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று பாகுபாடு இன்றி நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வாரி வழங்கி உள்ளார். இதனால்தான் சஜித் என்கிற நாமம் எட்டு திக்குகளிலும் ஓங்கி ஒலிக்கிறது.

சஜித் பிரேமதாஸவுன் தந்தையான ஆர். பிரேமதாஸவின் ஜனாதிபதி பதவி காலம் இந்நாட்டு மக்களுக்கு பொற்காலமாக அமைந்திருந்தது. இந்நாட்டு மக்களுக்காக குறிப்பாக ஏழைகளுக்காக தெளிந்த சிந்தனை, தீர்க்கதரிசனம், தூர நோக்கு ஆகியவற்றுடன் ஆர். பிரேமதாஸ அறிமுகப்படுத்திய வேலை திட்டங்கள் இன்னமும் தொடர்வது கண்கூடாக உள்ளது. அவ்வேலை திட்டங்களின் பெயர்கள், வடிவங்கள் மாறி இருக்கலாம்.

இதனால்தான் மீண்டும் பிரேமதாஸ யுகம் மலர வேண்டும் என்று எமது மக்கள் தீர்க்கமான தீர்மானம் எடுத்து வாக்களிக்க காத்திருக்கின்றார்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் வெற்றியை கொண்டாடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54