(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் ட்ரினிடாட், போர்ட் ஒவ் ஸ்பெய்ன் விளையாட்டரங்கில் மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்யின்றி முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் மழை காரணமாக கிட்டத்தட்ட 160 ஓவர்கள் வீசப்படவில்லை.
2023 ஜூலை மாதத்திலிருந்து இந்த வருடம் ஜுலை மாதம் வரை விளையாடப்பட்ட 28 டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிட்டிய நிலையில் இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
அப் போட்டியின் கடைசி நாளன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு கடைசி இன்னிங்ஸில் 298 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
298 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைவதைவிட 63 ஓவர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே மேற்கிந்தியத் தீவுகள் குறியாக இருந்தது.
ஏனெனில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அதன் கடைசி 6 விக்கெட்களை 16.1 ஓவர்களில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்திருந்தது.
எவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்ஸில் அலிக் அத்தானெஸ் பெற்ற 92 ஓட்டங்களின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 56.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு அணிகளினதும் தலைவர் தீர்மானித்தனர்.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியாகவும் அமைந்த இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் இந்த இரண்டு அணிகளும் அதே இடங்களில் இருக்கின்றன.
தென் ஆபிரிக்கா 16 புள்ளிகளைப் பெற்று 26.67 சதவீசத புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் 20 புள்ளிகளைப் பெற்று 20.83 சதவீதப் புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும் தொடர்ந்து இருக்கின்றன.
கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று 11ஆம் திகதி நிறைவடைந்த இப் போட்டியில் எண்ணிக்கை சுருக்கம் வருமாறு:-
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 357 (அணித் தலைவர் டெம்பா பவுமா 86, டோனி டி ஸோஸி 78, வியான் முல்டர் 41, ஜோமெல் வொரிக்கன் 69 - 4 விக்., ஜேடன் சீல்ஸ் 67 - 3 விக்., கிமர் ரோச் 53 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 233 (கியசி கெர்த்தி 42, ஜேசன் ஹோல்டன் 36, அணித் தலைவர் க்ரெய்க் ப்றெத்வெய்ட் 35, மிக்கய்ல் லூயி 35, ஜோமெல் வொரிக்கன் 35 ஆ.இ., கேஷவ் மஹாராஜ் 76 - 4 விக்., கெகிசோ ரபாடா 56 - 3 விக்.)
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 173 - 3 விக். டிக்ளயார்ட் (ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 68, டோனி டி ஸோர்ஸி 45, ஏய்டன் மார்க்ராம் 38, டெம்பா பவுமா 15 ஆ.இ., ஜோமெல் வொரிக்கன் 57 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் (வெற்றி இலக்கு 298 ஓட்டங்கள்) 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது 201 - 5 விக். (அலிக் அத்தானேஸ் 92, கியசி கெர்த்தி 31, ஜேசன் ஹோல்டர் 31 ஆ.இ., கேஷவ் மஹாராஜ் 88 - 4 விக்.)
ஆட்டநாயகன்: கேஷவ் மஹாராஜ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM