தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான வருண் தேஜ் பான் இந்திய நட்சத்திரமாக அறிமுகமாகும் 'மட்கா' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'மட்கா' எனும் திரைப்படத்தில் வருண் தேஜ், நோரா ஃபதேஹி, மீனாட்சி சவுத்ரி, நவீன் சந்திரா, சலோனி, அஜய் கோஷ், கிஷோர், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை வைரா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ் ஆர் டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர். விஜேந்தர் ரெட்டி மற்றும் ரஜினி தல்லூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான வருண் தேஜ் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்றும், இதில் இரண்டு கெட்டப்பிற்கான தோற்றப் புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக்காக படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் வருண் தேஜின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM