இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நிமிஷா சஜயனின் 'என்ன விலை?

12 Aug, 2024 | 08:56 PM
image

விருதுகளை குவித்த 'சித்தா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான மலையாள நடிகை நிமிஷா சஜயன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'என்ன விலை?' எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்ன விலை?' எனும் திரைப்படத்தில் கருணாஸ், வை. ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் , விஜயலக்ஷ்மி, ஷா ஷா, பிரவீனா, கமலேஷ்,' கோலிசோடா' பாண்டி , மோகன்ராம், நிழல்கள் ரவி, கவிதாலயா கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். திரில்லர் வகைமையில் குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை கலமாயா ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வி. ஜிதேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இரண்டாவது கட்டப் பிடிப்படபிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று நிறைவடையும் என்றும், இதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

கருணாஸ்- நிம்மிஷா சஜயன் முதன்முறையாக இணைந்திருப்பதாலும், இயக்குநர் சஜீவ் மலையாள திரையுலகில் சிறந்த படைப்புகளை வழங்கியவர் என்பதாலும், ' என்ன விலை? ' படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08