எம்மில் சிலர் நாளாந்தம் அலுவலக சூழலில் பணியாற்றும் போது சோர்வு ஏற்படும். பணி சுமையின் காரணமாக ஏற்படுகிறது என அவதானிப்பர் ஆனால் அதன் பின்னணியை மருத்துவர் ரீதியாக அவதானிப்பதில்லை. மேலும் அமர்ந்த நிலையிலிருந்து எழும் போதோ அல்லது உட்கார்ந்து இருக்கும் நிலையில் இருந்து எழுந்திருக்கும் போதோ அசௌகரியத்தை உணர்வர்.
ஆனால் இதற்கும் போதிய கவனத்தை செலுத்த மாட்டார்கள். இவை நரம்பு தளர்ச்சியின் நாட்பட்ட தன்மை என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் க்ரானிக் இன்ஃப்ளமெட்டரி டிமைலினேட்டிங் பாலிராடிகுலோநியூரோபதி எனவும் குறிப்பிடுகிறார்கள்.
நோயாளிகளுக்கு நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் நாட்பட்ட சோர்வு பாதிப்பை உரிய முறையில் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக நிவாரண வழங்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு பொதுவாக ஏற்படுவதால்.. அவர்கள் இதனை நாட்பட்ட நரம்புத் தளர்ச்சி பாதிப்பு என துல்லியமாக அவதானிக்காமல், இதற்கு வைத்திய சிகிச்சையை எடுத்துக் கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலி, பாத எரிச்சல்.. போன்றவை நாட்பட்ட நரம்பு தளர்ச்சியினால் ஏற்படுகிறது என்பதனையும் அவதானிப்பதில்லை. எனினும் நாட்பட்ட நரம்பு தளர்ச்சி பாதிப்பினால் அதிகம் பாதிப்பினை எதிர்கொள்வது இடுப்பு எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு மூட்டுகள் தான் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சிலர் எம்மால் சிகையை அலங்கரிக்க முடிவதில்லை. மேல் சட்டையை சௌகரியமாக அணிய முடிவதில்லை. மேலும் இதன் போது கை கால் போன்ற நரம்புகளில் மூலம் ஏற்படும் உணர்வில் சம சீரற்ற தன்மையும் ஏற்படுகிறது. மேலும் ஒரு பொருளை பிடித்துக் கொள்வதிலும் உள்ள பிடிமானம் தளர்ச்சி அடைகிறது என்பர்.
இவை நாட்பட்ட நரம்பு தளர்ச்சியின் பாதிப்புகள் என உணரலாம். இடுப்பு மற்றும் தொடை பகுதியில் வலி அல்லது அசௌகரியம், தோள்பட்டை மூட்டுகளை அசைப்பதில் இடையூறு, கைகள் மற்றும் பாதங்களில் உணர்வின்மை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
மேலும், தசை பலவீனம், தசை சிதைவு, தசை சேதம் போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வலியை உண்டாக்கும். வெகு சிலருக்கு திட மற்றும் திரவ உணவுகளை விழுங்குவதில் கூட பாரிய கடினத்தன்மை உண்டாகும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வைத்திய நிபுணர்களை சந்தித்தால் அவர்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். நரம்பியல் இயங்கு திறன் பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனை, நரம்பு திசு பரிசோதனை, தண்டுவட பிரத்யேக திரவ பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நாட்பட்ட நரம்பு தளர்ச்சிக்கான காரணத்தை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை , பிளாஸ்மா மாற்று சிகிச்சை, ஐ வி ஐ ஜி எனப்படும் இன்ட்ராவெனஸ் இம்யூனோகுளோபுலிங் தெரபி எனப்படும் நவீன சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறையை உறுதியாக ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்தால் ஆயுள் முழுவதும் நரம்பு தளர்ச்சி பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM