இன்றும் எம்முடைய வீடுகளில் ஞாயிறுக்கிழமை தோறும் மாலை வேலைகளில் அல்லது பொழுது சாய்ந்த பிறகு வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர் ஏனைய குடும்ப உறுப்பினர்களை அனைவரையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைத்து, அவர்களை கையில் சூடத்தை வைத்து திருஷ்டி சுற்றி, அந்த சூடத்தை வாசலுக்கு வெளியே சென்று ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் வீட்டிலிருந்து வெளியே சென்று அதன் பிறகு வீடு திரும்புபவர்கள். இவர்கள் பெரும்பாலும் எதிர்மறை ஆற்றலுடன் தான் வீட்டுக்குள் வருவார்கள்.
இவர்களின் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் அந்த எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் பரவி அவை கெட்ட சக்தியாக மாறிவிடும். இந்த கெட்ட சக்திகளை எதிர்த்து அவற்றை விரட்டுவதற்கு எம்முடைய முன்னோர்கள் எளிய வழிமுறைகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: சிவப்பு வண்ணத்தில் சதுர வடிவிலான துணி+ மஞ்சள் வண்ணத்தில் சதுர வடிவிலான துணி+ அரச மரத்தடியில் இருக்கும் மண்+ ஆல மரத்தடி மண் + வில்வ மரத்தடி மண் + துளசி செடி மண்.
ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் சதுர வடிவிலான துணியில் இந்த நான்கு மரத்தின் அடி பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட சிறிதளவு மண்ணை வைத்துவிட்டு, அதனை முடிச்சிட வேண்டும். உங்களுடைய வீட்டின் வீட்டு வாசலின் வெளிப்புறத்தில் சிவப்பு வண்ணத்திலான மண் முடிச்சினையும், வீட்டு வாசலின் முன்புறத்தில் மஞ்சள் வண்ணத்திலான மண் முடிச்சினையும் கட்டிட வேண்டும்.
இதனை தொடர்ச்சியாக பதினோரு நாட்கள் வைத்திருக்க வேண்டும். பனிரெண்டாவது நாள் காலையில் முதலில் வீட்டு வாசலில் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிவப்பு வண்ணத்திலான துணி முடிச்சினை அவிழ்த்து, அதில் உள்ள மண்ணை நீரில் கரைத்து உங்களது வீட்டின் புற வாசலில் தெளித்து விட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து உங்களுடைய வீட்டின் உள்பகுதியில் உள்ள மஞ்சள் வண்ணத்திலான துணி முடிச்சினை அவிழ்த்து அதனையும் நீரில் கரைத்து வாசலின் புறப் பகுதியில் தெளித்து விட வேண்டும்.
இதனை தொடர்ச்சியாக மூன்று முறை செய்திட வேண்டும். அதன் பிறகு நான்காவது முறையாக இதேபோல் செய்து அதனை ஒரு வருடம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.
இதனை மூன்று முறை செய்யும் போதே உங்களுடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அகன்று ஓடி, உங்களுக்கு சூட்சமமான முறையில் நல்ல பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.
பொதுவாகவே இந்த உலகத்தில் பூமாதேவியின் அடையாளமாகவும், மக்களின் மூன்று ஆசைகளின் பிரதானமாக இருக்கும் மண்ணாசையின் வடிவமாகவும் இருக்கும் இந்த மண்ணை வைத்து, அதனை சூட்சமமான முறையில் பயன்படுத்தி உங்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக திகழும் எதிர்மறை ஆற்றலை இத்தகைய எளிய மண் வழிபாட்டின் மூலம் அகற்றலாம். அத்துடன் மாய தடைகளை விலக்கி சுப பலன்களையும் பெறலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM