(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஜூலை மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை விருதை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வென்றெடுத்துள்ளார்.
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சமரி அத்தபத்து துடுப்பாட்டத்தில் அற்புதமான ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதமும் இந்த வருடம் மே மாதமும் ஐசிசி அதிசிறந்த வீராங்கனை விருதுகளை வென்றதன் மூலம் இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மூன்றாவது வீராங்னை ஆனார் சமரி அத்தபத்து.
அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், மேற்கிந்தியத் தீவுகளின் ஹெய்லி மெத்யூஸ் ஆகியோரே இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மற்றைய இருவராவர்.
அத்துடன் 2023ஆம் ஆணடுக்கான ஐசிசி அதிசிறிந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் சமரி அத்தபத்து தனதாக்கிக் கொண்டிருந்தார்.
இந்த விருதுகளை சீரான இடைவெளியில் பெற்ற சமரி அத்தபத்து தனது அதிசிறந்த ஆற்றல் மூலம் இந்தியாவுக்கு எதிரான ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்து தனது நாடு முதல் தடவையாக ஆசிய மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க உதவினார்.
ஐந்து போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைச் சதங்களுடன் 304 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவரது துடுப்பாட்ட சராசரி 101.33 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 146.85 ஆகவும் அமைந்திருந்தது.
மலேசியாவுடனான போட்டியில் சதம் குவித்த சமரி அத்தபத்து, பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அரைச் சதங்களைப் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM