55ஆவது வருடாந்த புனிதர்களின் நாற்கோண விளையாட்டுப் போட்டி : முதல் தடவையாக நான்கு சகோதர மகளிர் பாடசாலைகளுக்கு அழைப்பு

12 Aug, 2024 | 04:00 PM
image

(நெவில் அன்தனி)

(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)

ட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார், கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர், மருதானை புனித சூசையப்பர், பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் ஆகிய நான்கு பிரதான கத்தோலிக்க பாடசாலைகளுக்கு இடையிலான 55ஆவது புனிதர்களின் நாற்கோண (Saints Quadrangular) விளையாட்டுப் போட்டியும் ஒன்றுகூடலும்  இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளன.

இவ்வருட  புனிதர்களின் நாற்கோண விளையாட்டுப் போட்டிகளை ஜூட் பிள்ளை தலைமையிலான புனித அந்தோனியார் கல்லூரியின் கொழும்புக் கிளை பழைய மாணவர்கள் சங்கம் முன்னின்று நடத்துகிறது.

நான்கு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள் பங்குபற்றும் இப் போட்டிகள் பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி அரங்குகளிலும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்திலும் ஆகஸ்ட் 18ஆம், 19ஆம் திகதிகளில் நடைபெறும்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடும் வெற்றிக்கிண்ணங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் புனித பேதுருவானர் கல்லூரி கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த வருடப்  போட்டிகளில் சில மாற்றங்களை புனிதர்களின் நாற்கோண சங்கம் (Saints Quadrangular Association) செய்துள்ளதாகவும் முதல் தடவையாக சகோதர மகளிர் பாடசாலைகளுளின் பழைய மாணவிகள் சங்க அணிகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்ப ட்டுள்ளதாகவும் ஜுட் பிள்ளை தெரிவித்தார்.

பிரதான நாற்கோண  கிரிக்கெட்  போட்டியும் 40 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் நாற்கோண கிரிக்கெட்  போட்டியும் இம்முறை ஐசிசி விதிகளுக்கு அமைய ரி20 போட்டியாக நடத்தப்படும். இதற்கு முன்னர் பிரதான போட்டி 50 ஓவர்களாகவும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 25 ஓவர்களாகவும் நடத்தப்பட்டுவந்தது.

அத்துடன் வழமையான நாற்கோண கூடைப்பந்தாட்ட போட்டியை விட இம்முறை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாற்கோண மூத்தோர் (Veterans) போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனைவிட வழமைபோல் அணிக்கு எழுவர் றக்பி போட்டிகளும் நடத்தப்படும்.

இந்த நான்கு வகையான போட்டிகளும் புனித பேதுருவானவர் மைதானங்களிலும் கூடைப்பந்தாட்ட அரங்கிலும் நடைபெறும்.

40 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் ரி20 கிரிக்கெட் அரை இறுதிகளும் இறுதிப் போட்டியும் புனித சூசையப்பர் மைதானத்தில் நடைபெறும்.

இதனைவிட, கண்டி நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம், கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம், பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம், கொழும்பு 7 புனித பிறிஜெட்ஸ் கன்னியாஸ்திரிகள் மடம் ஆகிய  சகோதர மகளிர் கல்லூரிகளின் பழைய மாணவிகள் சங்க அணிகள்  பங்குபற்றும் அணிக்கு அறுவர் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் புனித பேதுருவானவர் மைதானத்தில் நடைபெறும்.

ஒவ்வொரு போட்டியிலும் சம்பியனாகும் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தனித்தனி கிண்ணங்கள் வழங்கப்படுவதுடன் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகும் அணிக்கு ரஞ்சித் சமரசேகர நினைவுக் கிண்ணம் வழங்கப்படும்.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் சம்பியனாகும் அணிக்கு பிரேமநாத் மொராயஸ் (ஓல்ட் பென்) ஞாகார்த்த கிண்ணமும் பிரதான கூடைப்பதாட்டப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு அருட்தந்தை ஜோ ஈ. விக்ரமசிங்க அடிகளார் கிண்ணமும் வழங்கப்படும்.

பரிசளிப்பு வைபவமும் டிஜே இசைக்குழுவுடன் ஒன்றுகூடலும் புனித பேதுருவானவர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த வருடம் புனிதர்களின் நாற்கோண விளையாட்டுப் போட்டிக்கு பிரிமா கொத்து மீ பிரதான அனுசரணையையும் வட்டவளை ரீ மற்றும் ஜீ எஸ் ஹெல்த் ஆகியன இணை அனுசரணையையும் வழங்குகின்றன.

புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரும் கிரிக்கெட் குழுத் தலைவருமான ஏஞ்சலோ விக்ரமசூரிய பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கடந்த வருடம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 54ஆவது புனிதர்களின் நாற்கோண விளையாட்டுப் போட்டியில் புனித அந்தோனியார் பழைய மாணவர் சங்கம் ஒட்டுமொத்த சம்பியனாகியிருந்தது.

வரலாறு

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு 1963ஆம் ஆண்டு அக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அழைப்பு பாடசாலைகள் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டது.

ஆனால், அப் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியுடன் புனித அந்தோனியார், புனித சூசையப்பர், புனித பேதுருவானவர் ஆகிய 3 கல்லூரி அணிகளே இணைந்கொண்டன.

இதனைத் தொடர்ந்து இந்த நான்கு கல்லூரிகளுக்கு இடையில் புனிதர்களின் நாற்கோண கிரிக்கெட் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

புனித அந்தோனியார் கல்லூரியின் கிரிக்கெட் அணிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த மறைந்த ரஞ்சித் சமரசேகரவை நினைவுகூரும் வகையில் 2017ஆம் ஆண்டிலிருந்து அவரது பெயரிலான கிண்ணம் ஒட்டுமொத்த சம்பியனுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்த வருடாந்த புனிதர்களின் நாற்கோண விளையாட்டுப் போட்டி ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த பழைய மாணவர்களுக்கு இடையிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இதனைவிட நான்கு கல்லூரிகளினதும் சமகால மற்றும் பழைய மாணவர்களுக்கு இடையிலான மெய்வல்லுர் போட்டிகள் 1985இலிருந்து புறம்பாக நடத்தப்பட்டுவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56