மாதாந்த உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய!  

12 Aug, 2024 | 05:34 PM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவுக்கு 3000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் அக்டோபர் மத்த்திலிருந்த வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். 

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3000 ரூபாவுடன் ஒக்டோபர் மாதம் ஓய்வூதியம் 6000 ரூபாவாக வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதன்பிறகு, நவம்பர் மாதம் முதல் இதுவரை கிடைத்த ரூ.2500 உதவித்தொகையுடன், புதிதாக வழங்கப்படும் இடைக்கால உதவித்தொகையான ரூ.3000 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

இந்த மேலதிக கொடுப்பனவான 3000 ரூபாவை வழங்குவதற்கு நிதி அமைச்சும் முழுமையான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளதால், அரச நிர்வாக அமைச்சு இதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டெம்பர் மாதம் அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன்படி, ஒக்டோபர் மாதம் இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவும், செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3000 ரூபாவுடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் 6000 ரூபா நிச்சயம் கிடைக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 01:54:30
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41
news-image

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டால்...

2024-09-08 21:08:28
news-image

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

2024-09-08 21:09:08
news-image

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்...

2024-09-08 18:59:12